கறம்பக்குடி, ஜூலை 20: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குறுவை நடவு பணிகள் இயந்திரம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதில், போதிய நடவு இயந்திரங்கள் கிடைக்காததால், ஆட்கள் மூலமும் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஆள் பற்றாக்குறையால் நடவுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வந்தன.
இதையறிந்த கொல்கத்தா, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆண், பெண் தமிழம் முழுவதும் நடைபெறும் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் மற்றும் அம்புக்கோவில் கிராமத்தில் தங்கி நடவு பணிகளில் வருடம் தோறும் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த வட மாநில ஆண் பெண் தொழிலார்கள் அம்புக்கோவில் கிராமத்தில் தங்கி நாற்று முடுச்சுகளை விளம்பியும், நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அம்புக்கோவில் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா மற்றும் உத்தமன் ஆகிய விவசாயிகளின் வயலில் குருவை நடவு பணியில் ஈடுபட்டு வரும் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த ரக்சன் என்பவர் கூறுகையில், ஒரு நாளைக்கு 3 ஏக்கர் முதல் 4 ஏக்கர் அளவிற்கு நாங்கள் நடவு பணியில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக ஒரு ஏக்கருக்கு ரூ.4,700 பணம் வாங்குகிறோம் என்றார். மேலும், இப்பகுதியில் உள்ள அணைத்து விவசாயிகளுக்கும் நாங்கள் வருடம் தோறும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது என்று கூறினார்.
The post அம்புக்கோவில் கிராமத்தில் குறுவை நடவு பணிகளில் கொல்கத்தா தொழிலாளர்கள் தீவிரம்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.
