×

வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

வருசநாடு: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து 10 பேர் கொண்ட குழு டூரிஸ்ட் வேனில் நேற்று வருசநாடு அருகே உள்ள சின்னச்சுருளி அருவிக்கு குளிக்க வந்தனர். அவர்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர். அருவி பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வந்தபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள விவசாய தோட்டத்திற்குள் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேனில் பயணம் செய்த திருமங்கலத்தை சேர்ந்த குமார் என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து வனத்துறையினர், மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Varasanadu ,Thirumangala, Madurai district ,Chinnachuruli Aruvi ,Varasanad ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...