சபரிமலையில் ஐயப்பன் சிலை வைப்பதாக கூறி தமிழ்நாட்டில் வசூலா..? கேரள போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானத்தில் புதிதாக பஞ்சலோக ஐயப்பன் சிலை அமைக்க தனக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்துள்ளதாக கூறி ஈரோட்டை சேர்ந்த ஒரு டாக்டர் தமிழ்நாட்டில் நன்கொடை வசூலிப்பதாக தேவசம் போர்டுக்கு புகார் வந்தது.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், முரளீ கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இது தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த டாக்டருக்கு நோட்டீஸ் அனுப்பவும், நன்கொடை வசூலிக்க அவருக்கு தடை விதித்தும், கேரள போலீசார் விசாரிக்கவும், சன்னிதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதி இல்லாமல் சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நன்கொடை வசூல் குறித்து ஏடிஜிபி ஸ்ரீஜித் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post சபரிமலையில் ஐயப்பன் சிலை வைப்பதாக கூறி தமிழ்நாட்டில் வசூலா..? கேரள போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: