×

கன்னியாகுமரியில் நடைபயிற்சியின் போது பைக் மோதி டி.எஸ்.பி. படுகாயம்

கன்னியாகுமரி, ஜூலை 20: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கன்னியாகுமரியில் உள்ளார். இதையடுத்து கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். குமரி மாவட்ட சமூக நலம் மற்றும் மனித உரிமைத்துறை டி.எஸ்.பி. பாலாஜியும், பாதுகாப்பு பணியில் இருந்தார். நேற்று முன் தினம் இரவு முதல் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்ட அவர், பணி முடிந்து நேற்று அதிகாலை கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகுதியில் நடைபயிற்சியில் இருந்தார். அப்போது அந்த வழியாக கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோயில் ஊழியர் வந்த பைக், டி.எஸ்.பி. மீது மோதியது. இதில் கீழே விழுந்த டி.எஸ்.பி. பாலாஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கன்னியாகுமரியில் நடைபயிற்சியின் போது பைக் மோதி டி.எஸ்.பி. படுகாயம் appeared first on Dinakaran.

Tags : DSP ,Kanyakumari ,RSS ,Mohan Bhagwat ,Kumari District Social Welfare and Human Rights Department ,Balaji ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...