×

மனநல காப்பகத்தில் வசித்த பெண் மாயம்

விழுப்புரம், ஜூலை 20: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் சுதாகர் நகரில் தனியார் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே சுனிதா(49) என்பவர் பிறவியில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்டு, அங்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்துள்ளார். இதனிடையே நேற்று மனநல காப்பகத்தின் காப்பாளர் விஜயலட்சுமி மற்றும் ஊழியர்கள் மளிகை கடைக்கு செல்ல புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளனர். அப்போது சுனிதாவும் அவர்களுடன் சென்றாராம். புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த சுனிதா திடீரென்று மாயமாகி உள்ளார். ஊழியர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் சுனிதா கிடைக்காதால் காப்பக உரிமையாளர் சுஜாதா அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனநல காப்பகத்தில் வசித்த பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Sudhakar Nagar ,Sunitha ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்