×

ஆந்திராவிலிருந்து போதைப்பொருள் கடத்தியவர் கைது

திருத்தணி. ஜூலை 20: திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி சோதனைச் சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பதியிலிருந்து திருத்தணி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் சோதனையிட்டதில், திருவாலங்காடு அருகே தொழிதாவூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (41) என்பவர் 6.5 கிலோ புகையிலை பதுக்கி கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்து லட்சுமணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆந்திராவிலிருந்து போதைப்பொருள் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tiruttani ,Ponpadi ,Chennai-Tirupathi National Highway ,Tirupati ,Lakshmanan ,Thozhithavur ,Thiruvalankadu ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு