- சாயல்குடி
- Kamudi
- முதுகுளத்தூர் டி.எஸ்.பி.
- முருகன்
- பவித்ரா
- அருப்புக்கோட்டை ஆதிப்பட்டி
- விருதுநகர் மாவட்டம்
- தின மலர்
சாயல்குடி, ஜூலை 20: கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்க சங்கிலியை முதுகுளத்தூர் டி.எஸ்.பி முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டியை சேர்ந்தவர் முருகன் மனைவி பவித்ரா(47). இவர் கடந்த திங்கட்கிழமை கமுதியில் ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை தவற விட்டுள்ளார். இது தொடர்பாக கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் நகையை கண்டெடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரான கடலாடி அருகே கே.கருங்குளத்தை சேர்ந்த முருகன், முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் டி.எஸ்.பி சண்முகம் முன்னிலையில் நகையை தொலைத்த பவித்ராவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது. மேலும் நகையை கண்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த முருகனுக்கு டி.எஸ்.பி சண்முகம் சால்வை அணிவித்து பாராட்டினார்.
The post சாலையில் கிடந்த தங்க சங்கிலி ஒப்படைப்பு appeared first on Dinakaran.
