×

மரக்கிளை விழுந்து பாதிப்பு

சாயல்குடி, ஜூலை 20: முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடி வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் முதுகுளத்தூர் தீயணைப்பு நிலையம் முதல் பரமக்குடி வரையிலும் சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. இந்நிலையில் கீழத்தூவல் பகுதியில் இருந்த புளியமரம் ஒன்றின் கிளை காற்றின் வேகத்திற்கு முறிந்து விழுந்தது. இதனால் முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதுகுளத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் மரக்கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

The post மரக்கிளை விழுந்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Sayalgudi ,Mudukulathur ,Thanjavur ,Paramakudi ,Keezhathuval ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...