×

பிளாஸ்டிக் பயன்பாடு தடைக்கு பின் ரூ21.47கோடி அபராதம் வசூல்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: பிளாஸ்டிக் பொருளுக்கு தடை அரசாணை பிறப்பித்த பின், ரூ.21.47 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 17.23 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என ஐகோர்ட்டில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்தது. அரசாணையை ஊட்டி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் முழுமையாக அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஊட்டியில் மே மாதம் நடந்த நாய் கண்காட்சியில் பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கண்காட்சிக்கு நாய் அழைத்து வந்த வாகனங்களில் பெட் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டுள்ளன நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. நாய் கண்காட்சியில் பெட் பாட்டில் பயன்படுத்திய நபர்களுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து நிர்வாகம் உத்தரவிட்டது. நீலகிரியில் அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தப்படவில்லை என உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

The post பிளாஸ்டிக் பயன்பாடு தடைக்கு பின் ரூ21.47கோடி அபராதம் வசூல்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் appeared first on Dinakaran.

Tags : Pollution Board ,Chennai ,Pollution Control Board ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்