பனியன் தொழிலாளி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

 

திருப்பூர், ஜூலை 19: திருப்பூர் வலையங்காடு வ.உ.சி. வீதியை சேர்ந்த தயாளன் (40), குமார் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அங்கு பனியன் ரோல் திருடியதாக அவரை தாக்கி அவரது சொத்தை சிலர் எழுதிவாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சல் அடைந்த அவர் கடந்த 16ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே தயாளனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். மேலும், அரசு மருத்துவமனையில் உள்ள அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர். இந்தநிலையில், நேற்று தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவமனை முன்பு தாராபுரம் மெயின்ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தற்கொலைக்கு காரணமானவர்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவின்கீழ் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து தயாளனின் உடலை அவரது உறவினர்கள் நேற்று இரவு பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post பனியன் தொழிலாளி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: