- சீமான்
- கோயம்புத்தூர்
- கோவை மாநகர காவல்துறை
- இந்திய தாய்மார்களின் தேசிய கூட்டமைப்பு
- நாதம் தமிழர் கட்சி
- திருப்பூர்
கோவை, ஜூலை 19: இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், அதன் நிர்வாகிகள் கோவை மாநகர போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா பற்றி குறிப்பிட்டு பேசும்போது, பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப்பிரச்னைக்கு குரல் கொடுக்காமல் எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்.
கஞ்சா, கொக்கைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கிடக்கிறார்களா? என மிக மோசமாக பேசி உள்ளார். இதுபோன்று பெண்களையும், பெண்கள் அமைப்புகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். அதேபோல், கடந்த 15ம் தேதி சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராசர் பிறந்த தினத்தையொட்டி அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் இழிவுபடுத்தி பேசி உள்ளார். எனவே, சீமான் மீது வழக்கு பதிவுசெய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
The post பெண்களை இழிவாக பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.
