தேனி, ஜூலை 19: கம்பம் வடக்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரைப் பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில், பிடிபட்டவர் கம்பம், உலகத்தேவர் தெருவை சேர்ந்த முருகன் (55) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்தினம் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
The post கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
