தேனி, ஜூலை 19: தேனி நகரின் முக்கிய சாலைகளாக தேனி நகர் கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் அதிகாலை தொடங்கி இரவு வரை எப்போதும் போக்குவரத்து வாகனங்கள் அதிகப்படியாக சென்று வருவதால் பெரும் போக்குவரத்து மிகுந்த சாலைகளாக உள்ளன.
இந்நிலையில், தேனி நகர் பெரியகுளம் சாலையில், அல்லிநகரம் தொடங்கி பொம்மையக்கவுண்டன்பட்டி, சுக்குவாடன்பட்டி, ரத்தினம் நகர், அன்னஞ்சி பிரிவு வரை உள்ள பெரியகுளம் சாலையில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் சாலையோரம் வீசப்படும் குப்பைகளை கிளறி தின்று திரிகின்றன.
இந்த மாடுகள் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. திடீரென மாடுகள் மிரண்டு சாலைகளில் ஓடும்போது, அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வரும் பயணிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் மாடுகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.
