×

ஆரம்ப சுகாதார நிலைய பணிகளுக்கு விண்ணப்பம்

 

சிவகங்கை, ஜூலை 19: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நல வாழ்வு குழுமத்தின் கீழ் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சங்கராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், மானாமதுரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை(3), செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர் நிலை (2), பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நல வாழ்வு குழுமத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. விண்ணப்பங்களை http:sivaganga.nic.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான ஆவணங்களுடன் ஜூலை 31க்குள் கிடைக்கும் வகையில் பதிவுத் தபால் மூலம் செயலாளர், சிவகங்கை மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவரியில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆரம்ப சுகாதார நிலைய பணிகளுக்கு விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,National Welfare Group ,Sivaganga District ,Sankarapuram Primary Health Centre ,Manamadurai Urban Primary Health Centres ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...