- டிட்டோ
- ஜாக்
- சிவகங்கை
- சிவகங்கை தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு
- டிட்டோஜாக்
- டிட்டோ ஜாக்
- தின மலர்
சிவகங்கை, ஜூலை 19: சிவகங்கை தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் 2ம் நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல் வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாயதைனேஸ் தலைமை வகித்தார்.
மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அன்பரசு பிரபாகர், ஜான் பீட்டர், மனோகரன், செல்வகுமார், சக்திவேல், ராமராஜன், அருள் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் மயில் மறியலை தொடங்கி வைத்து பேசினார். மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ் நிறைவு செய்து பேசினார். போராட்டத்தில் ஈடுபட்ட 98 பெண் ஆசிரியர்கள் உள்பட 217 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
The post டிட்டோ ஜாக்மறியல் போராட்டம் appeared first on Dinakaran.
