×

சேவை குறைபாடு வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்: குளச்சல் நகராட்சி அறிவிப்பு

 

குளச்சல், ஜூலை 19: குளச்சல் நகராட்சி தலைவர் நசீர், ஆணையாளர் கன்னியப்பன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை: குளச்சல் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளான சொத்துவரி விதிப்பு, கட்டிட வரைபடம், குடிநீர் விநியோகம்,குழாய் உடைப்புகள், பொதுசுகாதாரம்,

திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு மற்றும் அன்றாட அடிப்படை தேவைகளில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு, புகைப்படமாகவோ அல்லது குறுஞ் செய்தியாகவோ நகராட்சி கட்டுப்பாட்டு அலைபேசி எண்:8220289930 என்ற ‘வாட்ஸ் ஆப்’ செயலிக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

The post சேவை குறைபாடு வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்: குளச்சல் நகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Kulachal Municipality ,Kulachal ,Nasir ,Commissioner ,Kanniyappan ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...