×

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கொடுங்கையூர், கொளத்தூரில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

 

பெரம்பூர், ஜூலை 19: பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 34வது வார்டுக்கு உட்பட்ட கொடுங்கையூர் ஆர்.வி.நகரில் உள்ள பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஆர்.டி.சேகர் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், 34வது வார்டு மாமன்ற உறுப்பினர் சர்மிளா காந்தி, தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 64வது வார்டு சீனிவாசா நகர் 3வது பிரதான சாலையில் உள்ள பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. திருவிக நகர் பொறுப்பு மண்டல அதிகாரி சரவணன் செயற்பொறியாளர் சதீஷ்குமார், மண்டல குழு தலைவர் சரிதா, மாமன்ற உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர், இந்த முகாமுக்கு தேவையான பணிகளை செய்து கொடுத்தனர்.

மேலும் குடிநீர் வாரியம் சார்பில் மேற்பார்வை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பகுதி பொறியாளர் மைதிலி, துணை பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோரும் முகாம்களில் கலந்து கொண்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு சம்பந்தமான புகார்களுக்கு உடனடி தீர்வு கண்டனர்.

ஒவ்வொரு துறை சார்பிலும் தனித்தனியாக கவுன்டர்கள் அமைக்கப்பட்டு கூட்டம் ஒரே இடத்தில் சேராத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த முகாமை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கொடுங்கையூர், கொளத்தூரில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,Stalin ,Kodungaiyur, Kolathur ,Perambur ,Stalin Project ,Kodungaiyur R.V. Nagar ,Perambur Assembly ,R.D. Sekar ,MLA ,Thandaiyarpet… ,Stalin Project Camp ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு