×

திருத்தணியில் 74 மி.மீ மழை அரசு பள்ளியில் குளம் போல் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் அவதி

 

திருத்தணி, ஜூலை 19: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 74 மி.மீ மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கன மழைக்கு, நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்தது. குறிப்பாக, பழைய பஜார் தெரு, ஆறுமுகசாமி கோயில் தெரு, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் தேங்கியதால், அப்பகுதியில் குடியிருப்போர் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

குறிப்பாக, லேசான மழை பெய்தாலும் திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்று விடுகின்றது. நேற்று முன்தினம் பெய்த மழைக்கு மழைநீர் பள்ளி வளாகம் முழுவதும் தேங்கி நின்றதால், பள்ளிக்கு வந்த மாணவியர் அவதி அடைந்தனர். பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில் மழைநீர் வெளியேற வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.

The post திருத்தணியில் 74 மி.மீ மழை அரசு பள்ளியில் குளம் போல் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Tiruttani ,Tiruvallur district ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு