அரியலூர், ஜூலை 19: அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.9.11 கோடி மதிப்பீட்டில் 27 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு போக்குவரத்துதுறை, மின்துறை அமைச்சர் சா.சி.சிவங்கர் நேற்று குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.9.11 கோடி மதிப்பீட்டில் 27 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். செந்துறை ஒன்றியம்: கீழராயம்புரத்தில் ரூ.13.33 லட்சத்தில் தெற்கு தெருவில் மெட்டல் சாலை, சின்ன ஆனந்தவாடி கிராமத்தில் ரூ.151.16 லட்சம் மதிப்பீட்டில் கடுகூர் வரை சாலை மேம்படுத்தல், ரூ.1.50 லட்சத்தில் ஏரி தூர் வாரும் பணிகளை தொடங்கி வைத்தார். ஆனந்தவாடி ஊராட்சியில் அரியலூர் முதல் சென்னை கிளாம்பாக்கம் வரை சென்று வந்த பழைய பேருந்துக்கு பதிலாக, புதிய BS -VI பேருந்தை, சென்னை மாதவரம் வரை தடம் நீட்டித்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், ஆனந்தவாடி ஊராட்சி பகுதிகளில் சிமெண்ட் சாலை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். ஆ.சோழன்குறிச்சி ஆதிதிராவிடர் பகுதியில் கொட்டகை, சுற்றுச்சுவர், சிறுபாலம் மற்றும் சிமெண்ட் சாலை பணி, ஆனந்தவாடி ஊராட்சியில் மெட்டல் சாலை, பெரிய ஏரி, சம்பூர்ணம் ஏரி, சித்தேரி ஆகிய ஏரிகளை தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார். பின்னர், கிளிமங்கலம் கிராமத்தில் ரூ.75.94 லட்சம் மதிப்பீட்டில் கிளிமங்கலம் முதல் தெற்கு கிளிமங்கலம் வரை சாலை மேம்படுத்தும் பணியையும், தொடர்ந்து கிளிமங்கலம் ஆதிதிராவிடர் பகுதியில் ரூ.10.67 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் மெட்டல் சாலை அமைக்கும் பணியையும், பின்னர், பாளையக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.35.25 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணியையும், அதனைத்தொடர்ந்து வாளரக்குறிச்சி கிராமத்தில் ரூ.99.67 லட்சம் மதிப்பீட்டில் வாளரக்குறிச்சி முதல் கீழத்தெரு வரையில் சாலை அமைத்தல், ரூ.29.61 லட்சம் மதிப்பீட்டில் வாளரக்குறிச்சி ஆதிதிராவிடர் பகுதியில் சிறுபாலம் மற்றும் மெட்டல் சாலை அமைத்தல், இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் சிமெண்ட் சாலை பணி, இரும்புலிக்குறிச்சி ஆதிதிராவிடர் பகுதியில் பேவர் பிளாக் சாலை போன்ற பணிகளை அமைச்சர் துவக்கி வைத்து விரைந்து கட்டிமுடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
குமிழியம் ஊராட்சியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் குமிழியம் ஆதிதிராவிடர் பகுதி மாரியம்மன் கோவில் வரையில் சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை அமைத்தல்,ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் குமிழியம் ஆதிதிராவிடர் பகுதியில் சிமெண்ட் சாலை, பரணம் ஊராட்சியில் ரூ.125.46 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு பரணம் முதல் தெற்கு பரணம் வரை சாலை அமைக்கும் பணி உள்பட பணிகைள தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை, மாலை என இருவேளைகளிலும் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பிலாக்குறிச்சி ஊராட்சியில் இணைப்பு சாலை அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணியையும் துவக்கி வைத்தார். உரிய காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததெரிவித்ததாவது: பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது: செந்துறை ஒன்றியத்தில் பல்வேறு புதிய சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதிய பள்ளி கட்டடங்களும் கட்டுவதற்கு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஆனந்தவாடி, பாளையக்குடி, இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பிலாக்குறிச்சி என 5 ஊராட்சிகளில் புதிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரியலூர் மாவட்டம், ஆதனக்குறிச்சியிலும், பெரம்பலூர் மாவட்டம் சித்தளியிலும் கலந்துகொண்டேன். இரண்டு இடங்களிலும் பொதுமக்கள் அதிகளவில் வருகைபுரிந்து மனுக்களை அளித்துள்ளனர்.
மிக குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமை தொகை கேட்டுஅதிக அளவில் வந்து மனு அளிக்கின்றனர். இது மிகப்பெரிய வெற்றிகரமான நடவடிக்கையாக அமைந்துள்ளது என்றார். உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன், செந்துறை திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், செல்வம் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ரவி , திமுக மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ராமராஜன் , மாவட்ட பிரதிநிதி காளமேகம் மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
The post செந்துறை ஒன்றியத்தில் ரூ.9.11 கோடியில் 27 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
