புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: 11 வட்டாரங்களுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 19: குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம், ஆவுடையார் கோவில் மற்றும் மணமேல்குடி வட்டாரங்கள் தவிர ஏனைய 11 வட்டாரங்களுக்கு இலக்கு பிரித்து அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடித் திட்டத்தில் நெல் விதை விநியோகம் கிலோவிற்கு ரூ.20/- மானியத்திலும், இயந்திர நடவிற்கு மானியம் ரூ.4000 ஏக்கர் ஒன்றுக்கு திரவ உயிர் உரம் 0.5 லிட்டர் ரூ.60 மானியத்திலும், நெல் நுண்ணூட்ட கலவை உரம் 5 கிலோ ரூ.147.60 மானியத்திலும் ஆக மொத்தம் ஏக்கருக்கு ரூ.4608 வழங்கப்படுகிறது. விவசாயிகள் திட்டத்தின்கீழ் பயனடைவதற்கு உழவர் செயலியில் முன்பதிவு செய்யவும். மேலும், விவரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், மண் வளத்தினை மேம்படுத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் திட்டத்தின் கீழ் பயனடைவதற்கு உழவன் செயலியில் முன்பதிவு செய்யவும், மேலும், தொடர்புடைய வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உழவரைத்தேடி, வேளாண்மை உழவர் நலத்துறை, தமிழ்நாடு அரசு ஆணைப்படி உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை என்ற திட்டத்தில் பிரதி மாதம் 2வது மற்றும் 4 வது வெள்ளிக் கிழமைகளில் தேர்வு செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில், வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும், தோட்டக்கலைத் உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும், அமைத்து முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கலந்து கொண்டு நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தத கவல்கள் மற்றும் விழிப்புணர்வு, கள பிரச்சினைகளுக்கு உகந்த தொழில் நுட்பங்கள் வழங்கப்படுகிறது. எனவே, தங்கள் கிராமங்களில் நடைபெறும் மேற்கண்ட முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் நில உடமை பதிவு செய்தல் (FR), ஒன்றிய / மாநில அரசின் மானியத் திட்டங்கள் பெறுவதற்குஅனைத்து விவசாயிகளும் தங்களது கணினி சிட்டா, ஆதார்நகல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி ஆகியவற்றுடன் தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளவேளாண்மை / தோட்டக்கலை / விற்பனை துறைபணியாளர்கள் மூலமாகவோ தங்கள் கிராமத்தில் உள்ள சமுதாய வளபயிற்றுநர் (CRP) / இல்லம் தேடி கல்வி தன்னார்வளர்கள் (ITK)/ தங்கள் கிராமத்தில் அருகில் உள்ள பொது சேவை மையங்கள் (CSC) வாயிலாகவோ பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உழவர் செயலி, வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் உழவர் செயலியினை பயன்படுத்தி மானியத்தில் வேளாண் இடுபொருட்கள் பெறுவதற்கு முன் பதிவு செய்திடகேட்டுக் கொள்ளப்படுகிறது. உழவர் செயலியை Google Play store- இல் UZHAVAR என உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வாறு, மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: 11 வட்டாரங்களுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: