- ஆடி
- சோழீஸ்வரர் கோவில்
- பொன்னமராவதி
- திருவிளக்கு
- பூஜா
- ஆவுடை நாயகி அம்பாள் சமேத சோழேஸ்வரர் கோவில்
- அம்மன்
- அம்மான்…
- திருவிளக்கு பூஜை
பொன்னமராவதி, ஜூலை 19: பொன்னமராவதியில் உள்ள ஆவுடைய நாயகி அம்பாள் சமேத சோழீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்பர் ஆடி மாதம் துவங்கியது முதல் அம்மன் கோயில்களில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் திருவிளக்கு பூஜைகள், சாகை வார்த்தல், அலகு குத்துதல், தீ மிதித்தல், தீ சட்டி எடுத்தல், பால் குடம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தி சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைவரும் அம்மனை வழிபடுவர். ஆடி மாதம் துவக்கத்திலிருந்தே கடைசி நாள் வரை அம்மன்கோயில்களில் அபிஷேகம், உற்சவம், ஊர்வலம் என மங்கலகரமாகவே இருக்கும்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஆவுடைய நாயகி அம்பாள் சமேத சோழீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளியான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பெண்கள் காலை முதலே படையெடுத்தனர். கோயிலில் காலை 504 பெண்கள் விளக்கேற்றி பூஜை செய்தனர். அதேபோல், மாலையில் 504 பெண்கள் பங்குபெற்று வழிபட்டனர். காலை மற்றும் மாலையில் 1008 விளக்கு பூஜை செய்தனர். பாலாஜி குருக்கல் மந்திரங்கள் சொல்ல, பெண்களும் சொல்லி விளக்கு பூஜை செய்தனர். இதனைத்தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், விழாக்குழு நிர்வாகிகள் சேதுபதி, பாஸ்கர், சதீஷ்குமார், சரவணன், குமரன், காமராஜ், மணிமாறன், சாத்தையா, செல்வம், தியாகராஜன் உட்பலர் கலந்துகொண்டனர்.
The post பொன்னமராவதியில் சோழீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளி: 1008 திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.
