×

மன்னார்குடி பெண்கள் அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கான வழி காட்டுதல் விழிப்புணர்வு பயிற்சி

மன்னார்குடி, ஜூலை 19: மன்னார்குடி அரசு உதவி பெறும் தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக நாட்டு நலப்பணித் திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு வழிக் காட்டுதல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் பள்ளி தலைமையாசிரி யை ஆரோக்கியசெல்வி தலைமையில் நடைபெற்றது. திட்ட அலுவலர் இசபெல்லா வரவேற்றார். இதில், என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் கமலப்பன் பேசுகையில், புதிதாக சேர்ந்துள்ள மாணவிகள் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை புரிந்து கொண்டு, அதற்கான தீர்வுகளை கண்டறிய முயற்சிக்க வேண்டும். நேர்மை யுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும்.அனைவரும் சமம் என்பதை உணர்ந்து, பாரபட்சமின்றி அனைவரிடமும் அன் புடன் பழகுவதோடு சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.விடாமுயற்சியுடன் உழைப்பதோடு, தலைமைப் பண்புகளை வள ர்த்துக் கொண்டு.

மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண் டும். நாட்டு நலப்பணித் திட்டமானது, மாணவிகளுக்கு சமூக சேவை மட்டுமல்லா மல், அவர்களின் ஆளுமையை வளர்க்கவும் உதவுகிறது. எனவே, இந்த திட்ட த்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவிகள் தங்களை சமூகத் திற்கு பயனுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். முடிவில், உதவி திட்ட அலுவலர் பிரகாஷ் லூமன் நன்றி கூறினார்.

The post மன்னார்குடி பெண்கள் அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கான வழி காட்டுதல் விழிப்புணர்வு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Mannargudi Government Girls' School ,Mannargudi ,Mannargudi Government ,Thooyavalanar Girls' Higher Secondary School ,Arogya Selvi ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...