திருச்செந்தூர், ஜூலை 19:திருச்செந்தூர் பகுதியில் ஆட்டோக்களை தாறுமாறாகவும், வெளியூர் ஆட்டோக்களை அனுமதியின்றி இயக்குவதாகவும், அதிக ஆட்களை ஏற்றி செல்வதாகவும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், ஆட்டோக்களின் பின் பக்கத்தில் அமர வைத்து ஓட்டுவதாகவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாத்திமா பர்வீன், செயலாக்கப் பிரிவு தனபாலன்,
போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், கனகராஜன், சதீஷ் உள்ளிட்டோர் திருச்செந்தூர் பகுதியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 7 இடங்களில் நடந்த வாகன தணிக்கையில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோக்கள் சோதனை செய்யப்பட்டன. சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாத நான்கு பயணிகள் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
The post திருச்செந்தூரில் ஆட்டோக்கள் வாகன தணிக்கை appeared first on Dinakaran.
