ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சிபிஐ, இன்டர்போல் மற்றும் பிற நாடுகளின் சட்ட அமைப்புகளுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டதன் விளைவாக, 2020ம் ஆண்டிலிருந்து இதுவரை 134 குற்றவாளிகள் வெற்றிகரமாக இந்தியாவிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு மட்டும் 23 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் மேம்படுத்தப்பட்ட தூதரக உறவுகள், உயர் மட்டத் தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியது, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. மேலும், ‘ரெட் நோட்டீஸ்’ வெளியிடுவதில் ஏற்படும் கால தாமதத்தைக் குறைக்க, சிபிஐ ‘பாரத்போல்’ என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குற்றவாளிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை மேலும் வேகப்படுத்தியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
The post 10 ஆண்டு சாதனை 5 ஆண்டுகளில் முறியடிப்பு; வெளிநாட்டில் பதுங்கியிருந்த 134 குற்றவாளிகள் நாடு கடத்தல்: சிபிஐ அதிரடி appeared first on Dinakaran.
