அரசுப் பேருந்தில் AC வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

நெல்லை: அரசுப் பேருந்தில் AC வேலை செய்யவில்லை என்ற பயணியின் வழக்கில் நஷ்ட ஈடாக அதிகாரிகள் சொந்தப் பணத்தை வழங்க நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராஜேஷ் என்பவர் கடந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி மதுரையில் இருந்து நெல்லைக்கு ரூ.190 கட்டணமாக கொடுத்துச் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் AC வேலை செய்யாமல் இருந்ததால் பயணிகள் பலரும் அவதியடைந்துள்ளனர்.

போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் புகார் அளித்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜேஷ் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். நஷ்ட ஈடாக ரூ.25,000, வழக்குச் செலவு ரூ.10,000 என மொத்தம் ரூ.35,000-ஐ ஒரு மாதத்திற்குள், நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் தங்களது சொந்தப் பணத்தினை கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post அரசுப் பேருந்தில் AC வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: