×

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி: தமிழிசை பரபரப்பு பேட்டி

கோவை: இந்தியாவில் பிற மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருப்பது போல் தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.கோவை விமான நிலையத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டணி ஆட்சி குறித்து டெல்லியில் உள்ள தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இந்தியாவில் பிற மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருப்பது போல் தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதிமுக-பாஜ கூட்டணியில் ஒரு விரிசலும் இல்லை. டாஸ்மாக்கை கட்டுப்படுத்த திட்டம் வைத்துள்ளோம். எங்களுக்கு ஓட்டு போடுங்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அதை சொல்கிறோம். எங்க கூட்டணி பிரேக் ஆகாது. நான் உங்களுக்கு பிரேக்கிங் நியூஸ் தரமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி: தமிழிசை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,KOWAI ,TAMILISASAI CHOUNDRARAJAN ,NADU ,INDIA ,Goa Airport ,Tamilyasai Choundararajan ,Tamil ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...