திருவாரூர் : திருவாரூர் அருகே காரியாங்குடி பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விஜயராஜ், செந்தில், காளிதாஸ் ஆகிய மூவரும் இரவில் வன விலங்கை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு பள்ளிக்குள் நுழைந்து குடிநீர் குழாய்களையும் உடைத்துள்ளனர்.