சிப்காட் என்பது தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) ஆகும். இது 1971 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை திட்டமிடுதல், மேம்படுத்துதல், இயக்குதல் மற்றும் மேம்படுத்துவதாகும்.
இந்நிலையில் ஒசூரில் மேலும் ஒரு சிப்காட் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. சூளகிரியில் 1882 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு விண்ணப்பித்துள்ளது. ரூ.1003 கோடி முதலீட்டில் அமைய உள்ள தொழில் பூங்கா மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
The post ஒசூரில் மேலும் ஒரு சிப்காட் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம் appeared first on Dinakaran.
