திருச்செந்தூர், ஜூலை 18:திருச்செந்தூர் அருகே பிச்சிவிளையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். முகாமில் அதிகளவில் கலைஞர் உரிமை தொகைக்காக பெண்கள் மனு அளித்தனர்.
திருச்செந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேல திருச்செந்தூர், பிச்சிவிளை ஊராட்சிப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பிச்சிவிளையில் நடந்தது. முகாமிற்கு ஊரக வளர்ச்சித்துறை உதவி திட்ட அலுவலரும், முகாம் பொறுப்பு அலுவலருமான சீனிவாசன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்றோ, ஜான்சிராணி (கிராம ஊராட்சிகள்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 15 துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர். முகாமில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் அமைப்பாளர் எஸ்ஜே ஜெகன், ஒன்றிய செயலாளர்கள் உடன்குடி இளங்கோ, பாலசிங், முன்னாள் பஞ்., தலைவர்கள் பிச்சிவிளை ராஜேஸ்வரி, மேல திருச்செந்தூர் மகாராஜா, துணைத்தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மகளிர் உரிமைத்தொகை கேட்டு மனு
பிச்சிவிளையில் நேற்று நடந்த முகாமில் மொத்தம் 431 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 204 மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர். வருகிற 29ம்தேதி காயாமொழி, பள்ளிப்பத்து பஞ்சாயத்துட்பட்ட பகுதிகளுக்கும், ஆகஸ்ட் 14ம்தேதி அம்மன்புரம், மேலபுதுக்குடி, வீரமாணிக்கம் பஞ்சாயத்துகளுக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.
The post திருச்செந்தூர் அருகே பிச்சிவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு appeared first on Dinakaran.
