தூத்துக்குடி, ஜூலை 18:தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மில்லர்புரத்தில் இருந்து ஒலிபரப்பாகும் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு திடீரென தடைபட்டது. இதுகுறித்து அலுவலக உதவி பொறியாளர் அமல்ராஜ் (59) ஆய்வு மேற்கண்டார்.
அப்போது வானொலி நிலையம் பின்புறம் சிறிது தொலைவில் உள்ள கோபுரம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை அருகில் உள்ள கோபுரம் மற்றும் அதன் அருகிலுள்ள கட்டுப்பாட்டு அறை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 100 கிலோ எடை கொண்ட 6 காப்பர் காயில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அமல்ராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர் திருடி சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சிப்காட் வளாகத்தில் ரூ.1.85 லட்சம் காப்பர் வயர் திருடு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
