- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஓரணி, பட்டுக்கோட்டை பிராந்தியம்
- பதுக்கோட்டை
- ஜனாதிபதி
- திமுகா
- முதல் அமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- கே. அட்
- ஸ்டாலின்
- Orani
- தஞ்சை மாவட்டம்
- பட்டுக்கோட்டை நகரம்
- வடக்கு தொழிற்சங்க
- ஓரணி, பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை, ஜூலை 18: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகரம் மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை நகரப் பகுதியான மேலத்தெரு பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி நடந்தது. இந்த பணியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு வீடு, வீடாகச் சென்று சேர்க்கை பணியில் ஈடுபட்டார். மேலும், அவர்களது வீட்டு முகப்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார்.
முன்னதாக பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சூரப்பள்ளம் கிராமத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்றது. இதில், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை, நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா, செந்தில்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பழனிவேல், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் காமராஜ், பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பழஞ்சூர் செல்வம், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபன், ஒன்றிய துணை செயலாளர் சூரப்பள்ளம் வைத்திநாதன், சூரப்பள்ளம் திமுக கிளைச் செயலாளர் பாலு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post பட்டுக்கோட்டை பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம் appeared first on Dinakaran.
