- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- தஞ்சாவூர்
- கலெக்டர்
- பிரியங்கா பங்கஜம்
- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை
- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்
- ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம்…
- தின மலர்
தஞ்சாவூர், ஜூலை 18: தஞ்சையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணி, முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை மகாமகம் கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் உதவி இயக்குநர் நிலையிலான அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியப் பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுடன் இந்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப் புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி உட்கட்டமைப்பு திட்டம் (SIDS), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (AGAMTII), நமக்கு நாமே திட்டம் (NNT), குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டம் (CFSIDS). முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT), கலைஞரின் கனவு இல்லம் (KKI), ஊரகப் பகுதிகளில் அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் பழுது நீக்கம் செய்தல் (RRH), சிறுபாசன ஏரி மேம்படுத்தும் திட்டம் (MI Tank), அயோத்திதாச பண்டிதர் குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிடர் குக்கிராமங்கள் அடிப்படை தேவைகள் நிறைவேற்றும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) உள்ளிட்ட திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
மேலும், பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சரால் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post ஊரக வளர்ச்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் பணிகள்; பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வர வேண்டும் appeared first on Dinakaran.
