ஆண்டிபட்டி, ஜூலை 18: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதில் ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் ஆண்டிபட்டி ஒன்றியம், கடமலை-மயிலை ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் 200-க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளன. இதில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மலை சார்ந்த பகுதிகளாகவே உள்ளது.
இங்குள்ள மக்களுக்கு விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக மாதங்களாக மழை இல்லை. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது சிரமமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
The post வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சிரமம் appeared first on Dinakaran.
