×

கலெக்டர் அலுவலகம் முன் டிட்டோ ஜாக் அமைப்பினர் மறியல் போராட்டம்

தேனி, ஜூலை 18: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக டிட்டோஜாக் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தொடர் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணமுத்து மற்றும் ராஜவேல் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும் தொகுப்பூதிய நியமனங்கள் கூடாது என வலியுறுத்தியும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்க வேண்டும்,

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தேனி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 223 ஆசிரியர் ஆசிரியர்களை கைது செய்தனர்.

The post கலெக்டர் அலுவலகம் முன் டிட்டோ ஜாக் அமைப்பினர் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Ditto Jack ,Collector ,Theni ,Theni District Collector ,Ditto ,Jack ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...