கஞ்சா வாலிபர் ரகளை

 

திருப்பூர்,ஜூலை 18: திருப்பூர், காங்கேயம் சாலை, சி.டி.சி கார்னர் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியின் வழியாக திருச்சி, கரூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்கிறது. இந்நிலையில் நேற்று காலை கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதிக போக்குவரத்து நிறைந்த மிக குறுகலான சாலை என்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்தப்பகுதியில் கடை வைத்து நடத்தி வரும் சிலர் போதை இளைஞர் மீது தண்ணீர் ஊற்றி அவரை அப்புறப்படுத்தினர். நேற்று முன் தினம் குன்னத்தூர் பகுதியில் கஞ்சா போதையில் மாணவர்களை அரிவாள் கொண்டு சாலையில் தாக்க முயன்ற நிலையில் நேற்று சாலை நடுவே கஞ்சா போதையில் அமர்ந்து இளைஞர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது‌.

The post கஞ்சா வாலிபர் ரகளை appeared first on Dinakaran.

Related Stories: