- திமுக சாதனைகள் பொதுக்கூட்டம்
- சிவகங்கை
- திருப்புவனம் பழையூர்
- பேரூர் திமுக இளைஞர் அணி
- வெஸ்டர்ன் யூனியன் இளைஞர் பிரிவு
- கலைஞர்
- பேரூர் இளைஞர் அணி
- கண்ணன்
- தின மலர்
சிவகங்கை, ஜூலை 18: திருப்புவனம் பழையூரில் திமுக பேரூர் இளைஞரணி மற்றும் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் கலைஞரின் பிறந்த நளை முன்னிட்டு நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், பேரூர் செயலாளர் நாகூர்கனி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் வரவவேற்றார்.
மாவட்ட அவைத் தலைவர் கணேசன், தலைமைக் கழக இளம் பேச்சாளர் ஜோஸிஅபர்ணா, மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார். மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், சுப்பையா, பாலகிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகிகள் மகேந்திரன், இளங்கோவன், சக்திமுருகன், ராமு, மீனாட்சி சந்தரம், நிர்வாகிகள் சேகர், மணிகண்டன், சங்கர், தேவதாஸ், ராஜா, கோபால், முருகன், சித்ரா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வட்டச் செயலாளர் வேல்பாண்டி நன்றி கூறினார்.மணலூரில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அஜித்குமார் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் காளிதாஸ், கணேஷ், பிரபு, காளிமுத்து, வேல்முருகன், பிரசாந்த், முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, கிளைச் செயலாளர் பாரி மற்றும் நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.
