×

காரைக்குடியில் நாளை மறுநாள் வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை, ஜூலை 18: காரைக்குடியில் நாளை மறுநாள் (ஜூலை 20) வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து, அவர்களுக்கு அந்த வேலை சார்ந்த பயிற்சிகளை அளித்து, வேலையில் அமர்த்தும் பணியை டான்செம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக்கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 20ம் தேதி நடைபெறவுள்ளது. காரைக்குடி,கோவிலூர் சாலையில் உள்ள குளோபல் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் இம்முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனத்தின் சார்பில் நேர்காணல்களும் நடத்தப்படும். அதில், வெற்றி பெறுபவர்களுக்கு, அன்றே வேலைவாய்ப்புக்கான ஆணைகளும் வழங்கப்படும். முகாம் தொடர்பான, கூடுதல் விபரங்களுக்கு 8681878889, 9514838485, 98432 12111, 77084 53535 ஆகிய செல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post காரைக்குடியில் நாளை மறுநாள் வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Sivaganga ,Collector ,Porkodi ,Danchem ,Tamil Nadu Government Industrial Development Corporation ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...