×

பூதப்பாண்டி அருகே அனந்தனார் கால்வாய் கரையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

 

பூதப்பாண்டி, ஜூலை 18: பூதப்பாண்டி அருகே இறச்சகுளத்தில் இருந்து களியங்காடு செல்லும் சாலையில் அனந்தனார் கால்வாய் உள்ளது. சம்பவத்தன்று இந்த கால்வாய் கரையோரம் மருந்து பாட்டில், ஊசிகள், மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மருத்துவ கழிவுகளை பார்வையிட்டனர்.

இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே சாலையில் அதிகளவில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்தது. பின்னர் போலீசாரின் நடவடிக்கையின்பேரில் இதுநாள் வரை மருத்துவ கழிவுகள் கொட்டப்படாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post பூதப்பாண்டி அருகே அனந்தனார் கால்வாய் கரையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Ananthanar canal ,Bhutapandi ,Irachakulam ,Kaliyangadu ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...