நாகர்கோவில், ஜூலை 18: நாகர்கோவிலில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 சக மாணவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவனுக்கு அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 3 மாணவர்கள் தொடர்ந்து கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிளஸ் 1 மாணவர் இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பிளஸ் 1 மாணவரின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். பிளஸ் 1 மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 மாணவர்களை பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது.
The post நாகர்கோவிலில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக மாணவர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.
