×

ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து மைதானம்

 

கோவை, ஜூலை 18: கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய கூடைப்பந்து மைதானம் தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த புதிய மைதானத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி நேற்று துவக்கி வைத்தார். இது பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து போட்டிகளில் அதிகளவில் பங்கேற்கவும், மாணவர்களின் திறனை அதிகரிக்க செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

விழாவை, குமரவேல் கூடைப்பந்து அகாடமி, ஒண்டிப்புதூர் கூடைப்பந்து கிளப், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், அகாடமியின் கவுரவ தலைவர் முருகேசன், துணைத்தலைவர் சுவாமிநாதன், செயலாளர் செந்தில்குமார், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவிகள், ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள் மற்றும் காரமடை எஸ்ஜிவி பள்ளி மாணவ, மாணவிகளின் கூடைப்பந்து போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து மைதானம் appeared first on Dinakaran.

Tags : Ondipudur Government Higher Secondary School ,Coimbatore ,Ondipudur Government Boys Higher Secondary School ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...