×

சமத்துவபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

 

மதுக்கரை, ஜூலை 18: கோவை மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதி மக்களின் வசதிக்காக, பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி, தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதையடுத்து இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் பேரூராட்சி துணை தலைவர் கனகராஜ் முன்னிலையில், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் பவித்ரா, ஒன்றிய செயலாளர் விஜய் சேகரன் வெள்ளூர் பேரூராட்சி செயலாளர் ராஜு மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சமத்துவபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Samathuvapuram ,Madukkarai ,Chettipalayam Panchayat, Coimbatore district ,Pollachi ,Eswarasamy ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...