×

உயர்கல்வி சேர்க்கைக்கு நாளை குறைதீர் கூட்டம்

 

திருவள்ளூர், ஜூலை 18: திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து மாணவ – மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், உயர்கல்வி ஆலோசனை மைய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ – மாணவிகள் கட்டுப்பாட்டு அறையினை தொடர்புகொள்ள 9344410803, 7550057547 என்ற தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நாளை காலை 10 மணியளவில் மாணவர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post உயர்கல்வி சேர்க்கைக்கு நாளை குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,Prathap ,Tamil Nadu ,Thiruvallur District Administration ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு