×

திருத்தணியில் நிரந்தரமாக கிராம அலுவலரை நியமிக்க கோரிக்கை

 

திருத்தணி, ஜூலை 18: வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பெற கிராம நிர்வாக அலுவலரை அணுக வேண்டியுள்ளது. இருப்பினும், திருத்தணி நகரில் கடந்த ஒன்றரை ஆண்டாக நிரந்தர கிராம நிர்வாக அலுவலர் இல்லாத நிலையில் சிவ்வாடா கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் திருத்தணி நகரில் கூடுதல் பொறுப்பில் கவனித்து வருகிறார்.

திருத்தணி நகரில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் வீட்டுமனை பட்டா பணிகள் அதிகளவில் இருப்பதால், இங்கு பணியாற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. திருத்தணி நகரில் நிரந்தர கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் நிரப்பப்படாததால், பொதுமக்கள் அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், சான்றுகள் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலருக்கு அலுவலகம் இல்லாத நிலையில், ஒன்றரை ஆண்டாக கிராம நிர்வாக அலுவலரும் தனியாக நியமிக்காததால், நகர மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். திருத்தணிக்கு நிரந்தரமாக கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருத்தணியில் நிரந்தரமாக கிராம அலுவலரை நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Grama Niladhari ,Tiruttani ,Revenue Department ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு