- பள்ளிப்பட்டு அரசு
- பள்ளிப்பட்டு
- அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி
- சிறுவர் பாதுகாப்புத் துறை
- தலைமை ஆசிரியர்
- Devasakayam
- தின மலர்
பள்ளிப்பட்டு, ஜூலை 18: பள்ளிப்பட்டு அருகே, அத்திமாஞ்சேரிபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தேவசகாயம் தலைமை வகித்தார். இதில் பள்ளிப்பட்டு வட்டார குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கிரிஜா பங்கேற்று போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
குறிப்பாக, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதைப் பொருட்கள் பதுக்கி விற்பனை தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. இதேபோல் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, நெடியம், கரிம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் உயர் நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள், பாதுகாப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
The post பள்ளிப்பட்டு அரசுப்பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.
