கீழடி அகழாய்வு ஒருசார்பு வரலாற்றை நிறுவ ஒன்றிய பாஜ அரசு முயற்சி: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: கீழடியில் அகழாய்வை தொடர்ந்து செய்து 982 பக்கங்களில் முழுமையான அறிக்கையை தயாரித்தவர் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன். அவர் தயாரித்து அளித்த ஆய்வு அறிக்கையை திருத்தி எழுத வேண்டும் என்று ஒன்றிய அரசு மற்றும் அகழாய்விவு துறை கேட்டுக் கொண்டது.

இதை ஏற்க அமர்நாத் மறுத்து விட்டதால் மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், அமர்நாத்தின் அறிக்கையை புறக்கணித்துவிட்டு கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வை தயாரிக்க ஓய்வு பெற்ற பி.எஸ்.ராமன் என்பவரை நியமித்திருக்கிறது. ஓய்வுபெற்ற அதிகாரி ராமன் மூன்றாவது கட்ட அகழாய்வில் முக்கியமான கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை என்று கூறியிருப்பதும் அதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணனின் பதிலும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. உண்மையான வரலாற்றை ஆவணப் படுத்துவதற்கு பதிலாக ஒரு சார்பு வரலாற்றை நிறுவ ஒன்றிய அரசு முயல்வது கண்டனத்துக்குரியது.

The post கீழடி அகழாய்வு ஒருசார்பு வரலாற்றை நிறுவ ஒன்றிய பாஜ அரசு முயற்சி: ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: