உறுப்பினர்களாக முகமது ஷமீம், துணை தலைமை இயந்திர பொறியாளர் (சரக்கு), ஆர்.நாராயணன், துணை தலைமை பொறியாளர் (பொது) மற்றும் வல்லேஸ்வரா பாபுஜி தோகாலா, துணை தலைமை பாதுகாப்பு ஆணையர் (தலைமையகம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு விபத்தின் உண்மையான காரணத்தை கண்டறிந்து, இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த குழு சென்னை பிரிவின் சரக்கு ரயிலின் லோகோ பைலட் மற்றும் மூத்த உதவி லோகோ பைலட், மங்களூரு சென்னை மெயில் (12602) லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட், திருவள்ளூர் நிலைய அதிகாரி, சரக்கு ரயிலின் வணிக மேற்பார்வையாளர் உள்ளிட்ட 16 ரயில்வே ஊழியர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது. மேலும், இந்த குழு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பி.பி.சி.எல்.) நிறுவனத்தின் ஷிப்ட் சூபர்வைசரையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
The post சரக்கு ரயில் தீப்பிடித்து விபத்து 4 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு: 16 பேர் விசாரணைக்கு அழைப்பு appeared first on Dinakaran.
