மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 3 தொழிலாளர் பலி: 19 பேர் படுகாயம்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் நவமலை அமைந்துள்ளது. இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளில் வசிக்கும் 6 பெண் உள்பட 22 தொழிலாளர்கள் நேற்று காலை சரக்கு வேனில் கூலி வேலைக்காக காட்டம்பட்டி புறப்பட்டனர். வேனை தேவபாலன் (23) ஓட்டினார்.

காலை 8.20 மணி அளவில் கவியருவி அருகே மலைப்பாதையில் சின்னார்பதி என்ற பகுதியில் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில், மேல் பகுதியில் நின்றிருந்த தொழிலாளர்கள் வேன் அடியில் சிக்கியும், சாலையில் தூக்கி வீசப்பட்டும் படுகாயமடைந்தனர். காயமடைந்த 20 பேரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், பலத்த காயமடைந்த சஞ்சய் (20), மணி (40), மங்காரை (40), சாந்தி (52) காளியம்மாள் (30) ஆகிய 5 பேரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி னர். அங்கு சஞ்சய் இறந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

The post மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 3 தொழிலாளர் பலி: 19 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: