- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காஞ்சி
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- தின மலர்
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தும், ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தும் காணப்பட்டது. அனேக இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தும் காணப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று நீலகிரி மாவட்டம், கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும் ஓரிரு இடங்களில் மிக கனகமழை பெய்யும். மேலும் தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதேநிலை 22ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், இன்று முதல் 20ம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசும். தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60கிமீ வேகத்திலும் 21ம் தேதி வரை வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post இன்று முதல் 22ம் தேதி வரை மிக கனமழை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.
