×

நக்சல் பாதிப்புக்குள்ளான கிராமத்துக்கு முதல் அரசு பேருந்து சேவை தொடக்கம்

கட்சிரோலி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்க்கனார் கிராமம் பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகும். மேலும் இந்த கிராமம் நக்சல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இந்த கிராமம் போக்குவரத்து வசதியில்லாமல் பல ஆண்டுகளாக அவதிக்குள்ளாகி வந்தது. இந்நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக இங்கு அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் பேருந்து மார்க்கனார் கிராமத்திற்குள் நுழைந்தது. கிராம மக்கள் தேசிய கொடியை அசைத்து ஆரவாரத்துடன் அதனை வரவேற்றனர்.

The post நக்சல் பாதிப்புக்குள்ளான கிராமத்துக்கு முதல் அரசு பேருந்து சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : First government bus service ,Naxal ,Gadchiroli ,Markanar ,Maharashtra ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்....