மண்டி: இமாச்சலப்பிரதேசத்தில் ஜூன் மாதம் 30ம் தேதி முதல் ஜூலை ஒன்றாம் தேதி வரை 10 மேகவெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்தன, மழையினால் ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை மொத்தம் 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மாநிலத்துக்கு வெளியே இருந்து வந்த படைகள் படிப்படியாக முக்கிய இடங்களில் இருந்து திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.
The post மேகவெடிப்பால் பாதிப்பு; இமாச்சலில் மீட்புபணி படிப்படியாக நிறுத்தம் appeared first on Dinakaran.
